திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சென்னை வடகிழக்கு திமுக சார்பில் பாஜக மோடி அரசை கண்டித்து நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றிய பாசிச மோடி அரசை கண்டித்து சிறப்பாக எழுச்சிமிகு கண்டன பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளரும் எஸ் சுதர்சனம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில மீனவர் அணி துணைத் தலைவரும் திருவொற்றியூர் எம்எல்ஏவும் கேபி சங்கர் ஆகியோர் உடன் பங்கேற்பதில் பெருமிதம் என்றும் கண்டன உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றது பெருமிதம் என்று தெரிவித்தார். மத்திய அரசு வஞ்சிக்கிறது. ஆளுநர் ரவி திமுகவிற்கு நன்றாகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும் புதிய கல்விக் கொள்கையை சங்கிகளின் கல்விக் கொள்கையாக மாற்ற முயல்கின்றனர் என்றும் ஆளுநரை மாற்ற வேண்டாம். அவர் நன்றாகத் திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவருக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் குறித்து கேள்வி கேட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்.
கோமியம் குடித்துவிட்டுத்தான் கல்லூரிக்கு வரணும் என்பார்கள் என்றும் சங்கிகளிடம் இருந்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைக் காக்க வேண்டும். உயர்கல்வியில் காவிகள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஈரோடு வெற்றியைப் போன்று 2026 வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.