பொன்னேரி சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 22). தாய் தந்தையர் இருவரும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. சாலையில் விபத்தில் இறக்கும் நபர்களையும் வேறு சில அசம்பாவிதங்களில் இறக்கும் நபர்களின் உடல்களை எடுத்து அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவது. இறப்பில் மேளம் அடிப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டு அந்த கடையிலேயே தங்கி விடுவது தான் அஜித்தின் வேலை.
விபத்தில் இறந்த பலரின் உடலை அப்புறப்படுத்திய நபரின் உடல் அதேபோன்று விபத்தில் சாலையில் இருந்ததை பார்த்து அவரின் சக நண்பர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து காரணமாக மீஞ்சூர் சாலையில் போக்குவரத்து சற்று மந்தமாக இருந்தது. விபத்தில் உயிரிழந்த அஜித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.