திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்று மணல் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழக-ஆந்திர எல்லையில் ரகசியமாக மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் நெடும்பரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்து தமிழக கிராமத்தில் விற்பனை செய்ய முயன்றபோது, போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடராஜுலு மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.