சென்னையில், சொத்து பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஒருவர், சோழவரம் டோல்கேட் அருகே 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் என தெரியவந்துள்ளது.