அப்படி கடையில் பணி செய்து விட்டு வீட்டிற்கு கலாவதி முன்னதாகவே வந்து விடுவார். அதுபோல் நேற்று இரவு ஒன்பது மணியளவில் கலாவதி வீட்டிற்கு வரும் போழுது எதிர் முனையிலிருந்து ஸ்பிளெண்டர் பைக் உடன் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் ஹெல்மெட் அணிந்திருந்த நபர் ஒருவர் கலாவதியை நோக்கி வந்து அவர் அணிந்திருந்த தாலி செயினை அறுத்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கலாவதி அந்த நபர் இடத்தில் இருந்து செயினை லாவகமாக பிடித்ததால் வேறு வழி இல்லாமல் அந்த நபர் விட்டால் போதும் என்று ஓடிவிட்டார்.
மேலும் இதுகுறித்து கலாவதியின் கணவர் தினேஷ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் செயின் பறிக்க வந்த நபர் யார் என்பது குறித்து அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதாவது அவனின் உருவம் தெரிகிறதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.