திருவள்ளூர்: ஆளுநர்.. சிறுவாபுரி கோயிலில் சாமி தரிசனம்

திருவள்ளூர் வைகாசி விசாக தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோயிலுக்கு வருகை புரிந்தார். அவரது வருகையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வருவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

பாரம்பரிய உடையணிந்து கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநரை மேலதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆளுநர் ரவி அவர்கள் விநாயகர், மூலவர், உற்சவர் ஆகியோரை தரிசனம் செய்தார். பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்ய வருகை தந்ததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழக்கமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி