திருவள்ளூர்: தமிழக பட்ஜெட் கூட்ட தொடர்; எல்இடியில் நேரலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி சார்பில் அண்ணா சிலை முன்பாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி நிகழ்வை எல்இடி திரை மூலம் பொதுமக்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதனை மூன்று பேர் மட்டுமே அமர்ந்து பார்த்தனர். மற்ற இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. அங்கு நகராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் மட்டுமே பின்புறமாக நின்று கொண்டிருந்தனர். பொதுமக்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக காட்சியளித்தன.

தொடர்புடைய செய்தி