திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பொன்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
இன்று நடைபெற்றது.
யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு
மகா கணபதிக்கும் கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர்
ஸ்ரீ மகாவிஷ்ணு வைத்தீஸ்வரர் ஸ்ரீ பாலமுருகன் ஐயப்பன் சாய்பாபா கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகளுக்கும் கலச நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கணபதியின் அருளை பெற்று சென்றனர்.