சிறுவாபுரி கோவில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சிறுவாபுரி கோவிலில் விசேஷ தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்குள் அமைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள பிரதான வழி, அர்த்த மண்டபம் வழி, பின்வாசல் என அனைத்து இடங்களிலும் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், விஐபிகள் தரிசனத்தில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

இலவச வழியில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். கோவிலில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி