கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படுவதால் அவர்களுக்கு போதிய வாகனங்களில் இடமில்லாததால் கோவிலுக்கு நடந்து வர முதியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். சிறுவாபுரி கிராமத்தில் உள்ள வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. எனவே சுட்டெரிக்கும் கோடை வெயில் காலம் என்பதால் பக்தர்கள் எளிமையாக கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
சூர்யாவின் 'கருப்பு' பட வெளியீடு தாமதம்: ஓடிடி உரிமை சிக்கல்?