இதில் சிறப்பு அழைப்பாளராக விவேக் குமார் பி யாதவ் இந்திய வனப்பணி (இ.வ.ப) தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான செயற்பணி உதவி செயற்பணி இயக்குனர் கலந்துகொண்டு கருத்தரங்கின் விழாமலரை வெளியிட்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய விவேக் குமார் பி யாதவ் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் மற்றும் மாறிவரும் காலநிலையில் கடல் நீர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் தங்கள் பங்களிப்புடன் புதிய தொழில்நுட்பங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைநிறுத்த தயாராக வேண்டும்.
மேலும் நெகிழ்திறன், தணிப்பு மற்றும் தகவமைவு உத்திகளை கையாளுதல் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் காலநிலை மாற்றம் சம்பந்தமான துறைசார் வல்லுநர்கள், மீன்வள அறிவியல் கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.