மீஞ்சூர் ஒன்றியத்தின் அத்திமஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள சோமஞ்சேரி கிராமத்தில், 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆரணி ஆற்றுப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் குழாய், சிவபுரம் கிராமத்தின் வழியாகச் செல்லும் ரெட்டிபாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலை ஓரத்தில் உடைந்துள்ளது. இதனால், குடிநீர் சாலையில் குளம் போல் தேங்கி வீணாகிறது.