பெரியபாளையம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம், தற்போது புதர்கள் மண்டி, கழிவுநீர் கலக்கும் இடமாக மாறியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இக்குளத்தில், இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் அதன் நிலை மோசமடைந்துள்ளது. குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.