சுரங்க பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

திருவொற்றியூர் பகுதியில் 25.09 கோடி ரூபாய் செலவில் 24.75 அடி அகலம், 1,128 அடி நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 2024ல் தொடங்கின. ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் 155 அடி பணிகள் மின்னல் வேகத்தில் முடிந்தாலும், ஜோதி நகர் மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. இதனால், இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்திப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி