அதேபோன்று புதுவாயல் பகுதியில் உள்ள இ-காமர்ஸ் குடோன்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். சான்றிதழ் பெறாத பொருட்கள் இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததால், தரமற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பி ஐ எஸ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா, பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் பி ஐ எஸ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட பிறகும், சான்றிதழ் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பி ஐ எஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் வாங்கும் போது சான்றிதழ் முத்திரை இருக்கிறதா என்று பார்க்குமாறு பி ஐ எஸ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறது. BIS Care மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி ஐ எஸ் ஐ முத்திரை மற்றும் உற்பத்தியாளரின் உரிம எண்ணை சரிபார்க்கலாம். பி ஐ எஸ் சான்றிதழ் பெற்ற பொருள்தானா என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும், ஐ எஸ் ஐ முத்திரை இல்லாத பொருட்கள் அல்லது பி ஐ எஸ் சான்