திருவள்ளூர்: ராகுல் காந்தி பாகிஸ்தானின் தூதராக நியமிக்கலாம்.. கரு நாகராஜன்

ராகுல் காந்தி பாகிஸ்தானின் தூதராக இந்தியாவில் நியமிக்கலாம். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளின் கருத்துக்களைத்தான் ராகுல் காந்தி முன்மொழிகிறார். கரு நாகராஜன், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் திருஉருவப்படத்திற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஏழு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் உலகம் முழுவதும் சென்று இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்ததற்கான விளக்கங்களை தெரிவித்து வருவதாகவும், பாகிஸ்தான் மீதான போருக்கு வருத்தம் தெரிவித்த கொலம்பியா தற்போது அந்த வருத்தத்தை திரும்ப பெற்றுள்ளது என்றும், இந்தியாவிற்கு தற்போது பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாகவும், பாகிஸ்தானின் முகம் தோலுரிக்கப்பட்டது, அவர்களின் சாயம் வெளுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அருண்குமார், மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி