மின் வெட்டு: பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. இன்று பிற்பகல் முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல மணி நேரமாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர். மாற்று ஏற்பாடு செய்யாதது குறித்து பொதுமக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், தனியார் கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் அலுவலகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தொடர்புடைய செய்தி