அதன்பின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 2024 ஜூன் 27ஆம் தேதியிலிருந்து முழு திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் அந்த மின் நிலையத்திலிருந்து வணிகப் பயன்பாட்டிற்கான மின்சார உற்பத்தி செய்யப்படவில்லை.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், வடசென்னை மூன்றாவது அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி தொடங்கிய பின்பு பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டன. வணிக மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் வணிக மின் உற்பத்தி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.