திருவள்ளூர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

திருவள்ளூர் பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அனுமதி இல்லாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அந்த சார் திமுக அரசே பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பொன்னேரியில் தடையை மீறி அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் பலராமன் தலைமையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் செல்ல முடியாமல் திணறினர். 

ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பொன்னேரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இரண்டு அரசு பேருந்துகள் இரண்டு போலீஸ் வாகனங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொன்னேரி முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன், பொன்ராஜா, கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி