திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் சூர்யபிரியா (35). இவர் நேற்று (மே 29 வெள்ளிக்கிழமை) மாலை பணி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.