அம்பத்துார்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

சென்னையை அடுத்த அம்பத்துார் பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (67) என்பவர், 2020 பிப்ரவரி 4 அன்று, வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் தேவேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி