திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், தேசிய அனல் மின் நிலையத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் ரூ. 16.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். அப்போது, அங்கன்வாடிக்கு 'மாதவரம் காலனி' என பெயர் இருந்ததால், உடனடியாக அதை மாற்றும்படி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஒப்பந்ததாரர் இல்லாததால், பணியாளர்கள் மாற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து அவர் புறப்பட்டார். முன்னதாக, பொன்னேரி நகராட்சியில் ரூ. 1.40 கோடியில் பேருந்து நிலையம் மற்றும் ரூ. 72 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.