மீஞ்சூர்: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேவதானம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ரங்கநாயகி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர். 

ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் உள்ள பெருமாளின் பாதத்தில் வழிபாடு நடத்தினால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் என்பதால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் ரங்கநாதரை வழிபட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி