பொன்னேரி: ஆக்கிரமிப்பை மீட்டு சமுதாய கூடம்: அமைச்சர் அடிக்கல்

பொன்னேரி அருகே வேலம்மாள் தனியார் பள்ளி ஆக்கிரமித்த 22 செண்ட் இடத்தை மீட்டு சமுதாய கூடம்: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார். பொன்னேரி அருகே உள்ள பஞ்சட்டியில் ₹50 லட்சம் மதிப்பில் சமுதாய கூடக் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம் பஞ்செட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் சாமு நாசர், மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சங்கீதா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் அடிக்கல் நாட்டில் மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்புடைய செய்தி