மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பாலைவனம் பகுதியில் அமைந்த புயல் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. 

மாவட்ட துணை செயலாளர்கள் உமா மகேஸ்வரி, கதிரவன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், வெங்கடாஜலபதி, மாநில தகவல் தொடர்பு துணைச் செயலாளர், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி. எச். சேகர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன், ஆரணி பேரூர் செயலாளர் முத்து, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் திமுகவினர் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று உறுதிமொழியை ஏற்றனர். புயல் பாதுகாப்பு பேரிடர் மையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைவருக்கும் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி