திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீஞ்சூர் பேரூராட்சி உதவியாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் பேரூராட்சியில் 36 ஆண்டுகளாக பணி செய்யும் துப்புரவு தொழிலாளர் கண்ணன் என்பவரை பேரூராட்சி வாகன நிறுத்தத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஆறு லட்சம் ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் நேற்று(ஜன.3) இரவு 12 மணிக்கு கைது செய்துள்ளனர்.
அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் அவரின் குடும்பத்தார் இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக காவல்துறையினரை கண்டித்து அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு செல்வதை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மீஞ்சூர் பேரூராட்சி உதவியாளர் ராஜேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.