திருவள்ளூர்: செல்போன் கடையில் ரூ. 2 லட்சம் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கே.ஜி.என். அல்டாப் என்பவருக்குச் சொந்தமான செல்போன் விற்பனை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 14 செல்போன்கள், உதிரி பாகங்கள், விற்பனை பணம் ரூ.47,000 உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். அருகில் இருந்த மின்சாதன பொருட்கள் விற்பனை கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்து முடியாததால் புங்கம்பேடு பகுதியில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

மீஞ்சூர் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்களுடன் தடயவியல் சோதனைகளை மேற்கொண்டு விசாரணை நடத்தி மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி