திருவள்ளூர் மாவட்டம் இலவம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கலச நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் ஸ்ரீ லட்சுமி நாராயணர் மற்றும் சுவாமி சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் மீஞ்சூர், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.