திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறுவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து உறியடி விழாவில் பங்கேற்றனர். கிருஷ்ணரின் புகழைப் பாடும் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறுவர்களைப் பாராட்டினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.