திருநின்றவூரில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

திருநின்றவூரில் முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2ஆம் தேதி மாலை, வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்றார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீடு திறந்துகிடப்பதாகவும், வீட்டில் இருந்து சத்தம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது மாமனார் கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் முதல் மாடியின் கதவு பூட்டுடைக்கப்பட்டு படுக்கையறையில் இருந்த பீரோவில் இருந்த சுமார் 25 சவரன் தங்க நகைகள் திருடப்போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபரைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி