திருவள்ளூர்: போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குப் பிறகு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர். போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு வழங்கியபோதும், பொதுமக்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் கடலில் குளித்துச் சென்றதால், அவர்களைத் தடுக்க போலீசார் திணறினர்.

தொடர்புடைய செய்தி