திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக பட்டா வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் அம்மன் கோயில் ஆடி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பட்டா இல்லாத குடும்பங்களை ஒதுக்கிவிட்டு திருவிழா நடத்த முயற்சிப்பதாக கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். ஊருக்குள் அனைவரையும் ஒன்றிணைத்து திருவிழா நடத்தாமல் தங்களை ஒதுக்கி வைப்பதாக புகார் தெரிவித்தனர். தங்களுக்கு பட்டா வழங்கி அதன்பின்னர் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையுடன் திருவிழாவை நடத்த வேண்டும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா