பெரியபாளையம்: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சுரேஷ்குமார்-புவனேஸ்வரி தம்பதியினரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து, 15 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு தோட்டத்திற்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வீடு திரும்பிய தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி