பொன்னேரி ஆரணி ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் கட்டியிருந்த பல்வேறு கட்டுமானங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில், நேற்று பொன்னேரி நீர்வளத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர். இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து தங்கள் கட்டுமானங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.