பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் உள்ள 780 ஏக்கர் ஏரி, வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் துார்ந்து, முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேங்காமல் உள்ளது. இதனால், 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி தரிசாக கிடக்கின்றன. சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏரியை நம்பி உள்ள பழவேற்காடு மீனவப்பகுதிக்கு குடிநீர் வினியோகமும் கேள்விக்குறியாகி உள்ளது.