திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வார்ரூம் திறப்பு

பொன்னேரி வேன்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வார்ரூம் திறப்பு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பொன்னேரி வேன்பாக்கத்தில் வார்ரூம் திறக்கப்பட்டது. 

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணியாற்றும் வகையில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே வார்ரூம் திறக்கப்பட்டு தேர்தல் பணியை திமுகவினர் தற்போதே தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி