பொன்னேரி: திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.. ஆ. ராசா பங்கேற்பு

பொன்னேரியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கட்சியின் இன்டர்னல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மண்டல பொறுப்பாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர் சாமு நாசர், மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை. கலந்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்கள் அவரிடம் கலந்தாய்வுக் கூட்டம் குறித்து கேட்டதற்கு, கட்சியின் இன்டர்னல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் அவருடன் வந்த அமைச்சர் சாமு நாசர், கட்சி நிர்வாகி ஒருவர் வாங்கிய புதிய காரில் திமுக கொடியை அவரே மாட்டிவிட்டு, கட்சிக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டுமென அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி