திருவள்ளூர்: மேம்பாலத்தில் விரிசல் (VIDEO)

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே அரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் ரூபாய் 27 கோடி செலவில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது இதனை டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் 20 கண் கொண்ட பாலத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வேகப்படுத்தி திறந்து வைத்தனர்.

தற்போது இந்த மேம்பாலத்தில் விரிசல் விட்டு அதில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் மேம்பாலத்தில் வெளியே தெரிகின்றது வாகன ஓட்டிகள் வழியாக செல்லும் பொழுது பதிக்கப்பட்ட இரும்பு கம்பிகள் ஆட்டம் கண்டு வருகிறது இதனால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் உள்ள இந்த விரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்

தொடர்புடைய செய்தி