பொன்னேரியில் பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தை பங்குனி பிரம்மோற்சவ தெப்பல் திருவிழாவிற்காக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா 16.4.25 தேதி வரை நடைபெறுள்ளது. பங்குனி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தெப்பல் உற்சவம் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருக்கோவில் குளத்தை தூய்மைசெய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகழிவுகளையும் ரப்பர் மிதவுகளைப் பயன்படுத்தி நீரில் இறங்கி ஊழியர்கள் அகற்றி, குளத்தை தூய்மைசெய்துவருகின்றனர்.