ஆவடி: சாலையில் பற்றி எரிந்த கார்

ஆவடியை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஹேமந்த், தனது ஹூண்டாய் ஐ10 காரில் நேற்று இரவு 8:00 மணியளவில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றுகொண்டிருந்தார். பூந்தமல்லி அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சுதாரித்துக்கொண்ட ஹேமந்த் காரை சாலையோரம் நிறுத்தி உயிர் தப்பினார். பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. நசரத்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி