திருவள்ளூர்: பாதியில் நின்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பிருந்தாவன் விரைவு ரயில், நேற்று (மே 6) காலை 7:40 மணிக்கு புறப்பட்டபோது, திருவள்ளூர் அருகே திருவாலங்காடு – மோசூர் ரயில் நிலையம் இடையே 8:25 மணிக்கு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள் வந்து சரிசெய்த பிறகு, ரயில் 9:45 மணிக்கு புறப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி