புழல், காவாங்கரை, பன்னீர்செல்வம் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் கருணாகரன்(62) என்பவர், தன் வீட்டருகே புதிதாக கட்டி வரும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களை வைத்துள்ளார். இதனால், இவரது வீட்டருகே வசிக்கும் பிரேம்நாத் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 6 இரவு கருணாகரன் நடைபயிற்சி சென்றபோது, பிரேம்நாத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கை மற்றும் கம்பால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் பிரேம்நாத் (36) கைது செய்யப்பட்டார்.