தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, வருங்கால வைப்பு நிதி, பணியின்போது உயிரிழந்தோா் குடும்பத்துக்கு இழப்பீடு, மகளிருக்கு மகப்பேறு விடுப்பு, பயிற்றுநா்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் காந்திமதி நாதன் போராட்டத்தை துவக்கிவைத்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.