வணிகர் சங்க பேரவை தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் அரசு உள்ளாட்சித் துறை மூலம் வணிக உரிமை கட்டணம் 650 முதல் 3500 ரூபாய் வரை உயர்த்தி பின்பு வணிகர் சங்க கோரிக்கையை ஏற்று பழைய கட்டணத்தை மீண்டும் மாற்றி அமைத்தார்கள். ஆனாலும் தமிழக அரசு அதிகாரிகள் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வசூல் செய்ய முயல்கிறார்கள். பொன்னேரி நகராட்சியில் வணிக உரிமை கட்டணம் 3000 ரூபாய் கட்ட நிர்பந்தம் செய்கிறார்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியா முழுவதும் 2 லட்சம் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மே 5ல் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள் இடம்பெறும். இதில் வைகோ, திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் என தெரிவித்தார்.