திருவள்ளூர்: கோயில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள், புனிதநீர் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவின்போது, ஆலய வளாகத்தில் பக்தர் சுமதி என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி