திருவள்ளூர் அருகே பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற போது வேன் கவிழ்ந்து 15 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் படுகாயம். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பிளேஸ்பாளையம் பகுதியில் இருந்து வேன் மூலம் 15 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 19 நபர்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்ற போது கொல்லப்பாளையம் அருகே நிலைதடுமாறி வேன் சாலையோரம் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த 19 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் டில்லி பாபு போதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.