மாதவரத்தில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் உள்ள ஆந்திர மாநில பேருந்து நிலையத்தில், கொடுங்கையூரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணின் பையில் இருந்த 20 பவுன் தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகையைத் திருடியதாக ராஜேஷ் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து நகையும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராஜேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி