செங்குன்றம்: பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

செங்குன்றம், பெருங்காவூரைச் சேர்ந்த நெகேமியா ஜோயல்(24) என்பவரின் பைக் கடந்த 16ம் தேதி திருடப்பட்டது. இது தொடர்பாக மாதவரம் போலீசார் நடத்திய விசாரணையில், செங்குன்றம், நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த அஜ்மீர்(23) என்பவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அஜ்மீர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி