மாதவரம் பகுதியில் பைக் டாக்சியில் பயணம் செய்த வாலிபரை மிரட்டி பணம் பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மாதவரத்திற்கு லீலா ராம் என்பவர் பைக் டாக்சி மூலம் பயணம் செய்துள்ளார். பைக்கை ஓட்டிய சந்தோஷ் குமார், மாற்றுப் பாதையில் சென்று மற்றொருவருடன் சேர்ந்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.