சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில், பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக சீண்டியதாக திருவள்ளூர் நகர 6வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பிரபாகரனை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.